இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ச வர்தன் ஷ்ரிங்லா இன்று இலங்கைக்கு அவசர விஜயம் மேற்கொண்டு வருகின்றார்.

இந்திய – இலங்கை உறவுகளுக்கு இடையிலான நெருக்கடிகளுக்கு மத்தியில் இவ்விஜயம் இடம்பெறுகின்றது.

நியூயோர்க்கில் 10 நாட்களுக்கு முன்னர் இரு நாடுகளின் வெளிவிகார அமைச்சர்களுக்கும் இடையில்  இடம்பெற்ற சந்திப்பின் தொடர்ச்சியாகவே இவ்விஜயம் பார்க்கப்படுகின்றது.

அடுத்த வாரங்களில் இலங்கையில் முழுமையான அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டி உள்ளன.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதாக உள்ளது.

இலங்கை அரசாங்கத்தை ஆதரிக்கின்ற தமிழ் தலைவர்கள் கடந்த வாரங்களில் தமிழ்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டு சென்று பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.

இவ்வாறான சூழ்நிலைகளில் இந்திய வெளியுறவு செயலாளரின் விஜயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

இவர் இங்கு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , நி தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் ஆகியோரையும் தமிழர் தரப்புகளையும் சந்தித்து பேசுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.