சிவனருள் பௌண்டேசனால் திருக்கோவில் காயத்திரி கிராமத்தில் இரு வீடுகள்!

(ஜே.கே.யதுர்ஷன் )

சிவனருள் பௌண்டேசனால் திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிலுள்ள காயத்திரி கிராமத்தில் தலா ரூபா 5 இலட்சம் பெறுமதியான இரு வீடுகள் அமைக்கும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டன.

திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரனின் ஆலோசனையுடன் சிவன் அருள் பவுண்டேசன் ஊடாக லண்டனில் வசிக்கும் .ரி.பாலேந்திராவின் நிதிப் பங்களிப்பில் இன்றைய (27) தினம் வீட்டுக்கான கட்டுமானப் பணி அடிக்கல் நடப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது.’