கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சுபிட்சத்தின் நோக்கு திட்ட முன்மொழிவு கூட்டம்!

அரசாங்கத்தின் 2022 ஆம் அண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. பிரதேச செயலாளர் செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நேற்று நடைபெற்ற வனஜீவராசிகள் யானை வேலிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க இக் கூட்டத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் பே.இராஜகுலேந்திரன் பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர்களான எஸ்.சாந்தலிங்கம் சிறிபால ஆகியோர் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

20222 ஆம் ஆண்டு ஒவ்வொரு கிராமத்திற்கும் மூன்று மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது இவை தொடர்பான திட்ட முன்மொழிவுக்கலந்துரையாடல் ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.