களுதாவளை, கோட்டைக்கல்லாறு பகுதிகளுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ விஜயம் செய்தார்!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று (23.09.2021) அமைச்சர் நாமல் ராஜபக்ஷ விஜயம் செய்திருந்தார். களுதாவளையில் அமைந்துள்ள மத்திய பொருளாதார நிலையத்திற்கு பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைப்பாளரும்இ மட்டக்களப்பு மாவட்ட அவிருத்தி குழு துணைத்தலைவருமான ப.சந்திரகுமாரின் அழைப்பின்பேரில் வருகைதந்து பொருளாதார மத்திய நிலையத்தை இயங்கச்செய்வது தொடர்பாக பார்வையிட்டதோடு களுதாவளை பிரதேச இளைஞர்களிடம் அங்குள்ள குறைபாடுகளையும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து 1.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட கோட்டைக்கல்லாற்றிலுள்ள விளையாட்டு மைதானம் திறந்து வைக்கப்பட்டது இந் நிகழ்வு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதற்கான நிதி ஒதுக்கீடு கிராமிய விளையாட்டு மைதானங்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வேண்டுகோளுக்கமைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.