செல்வராஜா கஜேந்திரன் MP சற்று முன்னர் கைது!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக் கைது தொடர்பாக மேலும் தெரியவருவதானது

யாழ்ப்பணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியில், நினைவேந்தலை முன்னெடுக்க முயன்றபோது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ராஜீவ் காந் மற்றும் கட்சியின்
செயற்பாட்டாளர் ஒருவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது