அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இன்று (23) மட்டக்களப்பிற்கு விஜயம்

தேசிய இளைஞர் விளையாட்டுத்துறை மற்றும் அபிவிருத்தி மேற்பார்வை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இன்று (23) மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ளார்.

அபிவிருத்திகளை பார்வையிடுவதற்காகவும், புனரமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானங்களை கையளிப்பதற்காகவும் அவர் இவ் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன் முதலாவது நிகழ்வாக வந்தாறுமூலையில் புனரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தினை கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.

மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய வேலைத்திட்டமான ரூகம் கித்துள் குளங்களை இணைப்பது தொடர்பான வேலைத்திட்டத்தினையும் பார்வையிடுவதற்கு அமைச்சர் எதிர்பார்த்துள்ளார்