விவாசாய மாதிரி கிராம திட்டத்தின் கீழ் நுண் நீர்பாசன பொருட்கள் வழங்கி வைப்பு!

(ஜே.கே.யதுர்ஷன் -திருக்கோவில்)

காலநிலைக்கு சீரமைவான விவசாய நீர்ப்பாசன திட்டத்தின் விவாசாய மாதிரி கிராம திட்டத்தின் கீழ் நுண் நீர்பாசன பொருட்கள் 19.09.2021 நேற்று வழங்கிவைக்கப்பட்டன.

உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் விவசாய அமைச்சினால் நடைமுறைப் படுத்தப்படும் விவாசாய மாதிரி கிராம திட்டத்தின் கீழ் நுண் நீர்பாசன தொகுதிப்பொருட்கள் மற்றும் மாமரக் கன்றுகள் என்பன திருகோணமலை மொறவெவஇ கோமரங்கடவல ஆகிய பிரதேசங்களில் பிரதேசத் தலைவர் டபிள்யு. பி. ஜெகத் குமார (மொறவெவ) மற்றும் பிரதேசத் தலைவர் சந்தன விஜித குமார (கோமரங்கடவல) ஆகியோர்களினால் விவசாயிகளிற்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வானது கிழக்கு மாகாண காலநிலைக்கு சீரமைவான விவசாய நீர்ப்பாசன திட்ட பிரதி பணிப்பாளர் மற்றும் விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் விவசாய போதனாசிரியர்கள் மற்றும் கிழக்கு மாகாண விவசாய மற்றும் நீர்பாசன உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்