நற்பிட்டிமுனையில் நள்ளிரவில் யானைகள் அட்டகாசம்!

அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் அண்மைக்காலமாக யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றன.

தற்போது ஊர் மனைகளுக்குள்ளும் நள்ளிரவு வேளைகளில் யானைகள் உட்புகுந்து அட்டகாசம் செய்கின்றன. நேற்று முன்தினம் கல்முனை நற்பிட்டிமுனை கிராமத்தில் நள்ளிரவில் சென்ற யானைகள் மதில்களையும் உடைத்து தள்ளியுள்ளதுடன் வாழை மரங்களையும் பிடுங்கி சாய்த்துள்ளன.

ஊர்மக்கள் சேர்ந்து யானைகளை ஊருக்கு வெளியே விரட்டி இருந்தனர்.