கூட்டமைப்பினது தேசிய பட்டியல் எம் பி பதவி கோடீஸ்வரனுக்கு வழங்கப்படலாம்?

-தர்மேந்திரா-

கூட்டமைப்பினது தேசிய பட்டியல் எம் பி

  பதவி கோடீஸ்வரனுக்கு வழங்கப்படலாம்?

-தர்மேந்திரா-

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் எம். பி பதவியில் இருந்து தவராசா கலையரசன் நீக்கப்பட்டு அவருடைய இடத்துக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் நியமனம் பெறுகின்றார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது.

கடந்த பொது தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த தேசிய பட்டியல் அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கப்பட்டது. தமிழரசு கட்சி சார்பாக தவராசா கலையரசன் நியமிக்கப்பட்டார்.

தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசாஇ ரேலோ சார்பு கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் இத்தேசிய பட்டியலை பெறுவதற்கு பகீரத முயற்சிகள் மேற்கொண்டு இருந்தனர் என்று அந்நாட்களில் பரபரப்பு தகவல்கள் அடிபட்டு இருந்தன.

இந்நிலையில் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் குறிப்பாக தமிழரசு கட்சிக்கும்இ ரெலோவுக்கும் இடையில் உட்பூசல்கள் தீவிரம் அடைந்து உள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்துக்காக  கலையரசனுக்கு வழங்கப்பட்ட தேசிய பட்டியல் கோடீஸ்வரனுக்கு மாற்றி கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் உலாவுகின்றன.

நாம் இது தொடர்பாக கலையரசனை தொடர்பு கொண்டு கேட்டபோது அம்பாறை மாவட்டத்துக்கான தேசிய பட்டியல் எனக்கு எழுந்தமானமாக வழங்கப்படவில்லைஇ மத்திய குழுவை கூட்டி இப்பதவிக்கு மிக பொருத்தமானவர் யார்? என்று அடையாளம் கண்டே என்னை தெரிவு செய்தனர்இ என்னை நியமனம் செய்தபோது எவ்விதமான நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை என்றார்.

நாம் கோடீஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்டபோது அவருடைய தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களில் மும்முரமாக உள்ளார் என்றும்இ அதை ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அறியகொடுத்து உள்ளார் என்றும் உரிய நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.