ஆசிரியர்களுக்கு அடுத்த வாரம் 2வது டோஸ்!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அடுத்த வாரம் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படும்.

தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட பின்னர் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பாக ஆராயப்படுகின்றது என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் உறுதி செய்யும்வரை பாடசாலைகளை திறப்பது தொடர்பாக எந்நத முடிவும் எடுக்க மடியாது. முதலில் எந்த வகுப்புக்களை ஆரம்பிப்பது என்பது தொடர்பாகவும் சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன். தொற்று நிலைமையினை கருத்தில் கொண்டு இறுதி தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றார்.