தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா? நாளை கலந்துரையாடல்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது தொடர்பில் நாளை (3) தீர்மானமிக்க கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொரோனா தடுப்பு தேசிய செயலணியுடனான கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ள நிலையில் இதன்போது தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்-

நாட்டில் கொரோனா பரவலைகட்டுப்படுத்துவதற்காக ஓகஸ்ட் மாதம் 20 திகதி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.