பால்மாவுக்கான வரி நீக்கப்பட்டாலும் 200 ரூபாவால் அதிகரிக்கும் நிலை!


பால்மாவுக்கான இறக்குமதி வரியை அரசாங்கம் நீக்கினாலும், பால் மா இறக்குமதியை தொடர முடியாத நிலைமையே காணபப்டுவதாக பால் மா இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி வரியை நீக்கப’பட்டாலும், ஒரு கிலோ பால்மாவுக்கு இறக்குமதியின்போது ஏற்படும் நட்டத்தில் 100 ரூபாவை மாத்திரமே ஈடு செய்யக் கூடியதாக இருக்கும் என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நத நிலையில் பால் மாவுக்கான இறக்குமதி வரி நீக்கப்பட்டாலும்; ஒரு கிலோ பால் மா இறக்குமதியில் 200 ரூபா நட்டம் உள்ளது. அதன்படி, வரி நீக்கப்படும்போதும் ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலையை குறைந்தது 200 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என சங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.