அக்கரைப்பற்றில் ஆமைகளை பிடித்து அதனை இறைச்சியாக விற்பனை செய்துவந்த ஒருவர் 16 ஆமைகளுடன் கைது 

(கனகராசா சரவணன்;)
அம்பாறை அக்கரைப்பற்று வாவியில் இருந்து சட்டவிரோதமாக ஆமைகளை பிடித்து இறைச்சிகாக நீண்டகாலமாக விற்று வந்த அக்கரைப்பற்று கண்ணகிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் 16 பால் ஆமைகளை மோட்டர்சைக்கிளில் இன்று செவ்வாய்க்கிழமை (10) மாலை  எடுத்துச் சென்ற நிலையில் கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட சிவேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் மற்றும் கொரோனா தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எம். சதாத் தலைமையிலான பொலிசாருடன் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து சம்பவதினமான இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் அக்கரைப்பற்று நகர் பகுதில் கண்கபணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.

இந்த நிலையில் அக்கரைப்பற்று வாவியில் இருந்து ஆமைகளை பிடித்து உரைபப்பையில் போட்டு மோட்டார் சைக்கிளில் எடுத்துக் கொண்டு கண்ணகிபுரத்திற்கு எடுத்துச் சென்ற போது அக்கரைப்பற்று நகர்பகுதியில் வைத்து குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவரை மடக்கி பொலிசார் பிடித்தனர்.

அதன்போது மோட்டார்சைக்கிளில் எடுத்துச் சென்ற உரைய் பையை சோதனையிட்டபோது அதில் இருந்து 16 பால் ஆமைகளை மீட்டதுடன் அவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் அக்கரைப்பற்று கண்ணகிபுரத்தைச் சேர்ந்தவர் எனவும் இவர் ஆமைகளை சட்டவிரோதமாக பிடித்து இறைச்சியாக்கி அதனை அம்பாறை நகரிலுள்ள கேபட்டல்களுக்கு நீண்ட காலமாக விற்பனை செய்துவருதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.