தடுப்பூசி செலுத்துதலில் கல்முனை பிராந்தியம் முன்னிலை – நேற்றும் இன்றும் 45201 பேர் தடுப்பூசி செலுத்தினர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் இருதினங்களில் 45201 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். நேற்றைய தினம் (24.07.2021) 20641 நபர்களும் ,இன்றைய தினம் (25.07.2021) 24560 நபர்களும் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளனர்.

தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் பெரும் ஆர்வமாக உள்ளனர் எனவும், தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக ஒத்துழைப்புக்களை வழங்கி வரும் அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

கல்முனை பிராந்தியத்துக்கு முதற் கட்டமாக ஐம்பதாயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு நேற்று சனிக்கிழமை தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.