மற்றுமொரு யுவதியிடமும் ரிசாட்டின் குடும்பத்தினர் பாலியல் சேட்டைகள்

டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்கள் நால்வரையும் 72 மணித்தியாலங்கள் தடுத்து விசாரணைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரேஷ்ட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த நால்வரும் தற்பொழுதும் பொலிசாரின் தடுப்பு காவலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.-

அத்துடன், முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய மற்றுமொரு பெண்ணும் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் நேற்று விசாரணைகளில் தெரியவந்தது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் 44 வயதுடைய மைத்துனர் கைது செய்யப்பட்டார்.

அதேவேளை, டயகம சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட்டின் மனைவியான ஷெஹாப்தீன் ஆயிஷா அவரின் தந்தையான மொஹமட் ஷெஹாப்தீன் மற்றும் இடைத்தரகர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த சமப்வம் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி – கெப்பிட்டல்