எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணை தொடர்பில் பாராளுமன்றில் இன்று (20) இடம்பெற்ற வாக்கெடுப்பில் குறித்த பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணைக்கு எதிராக 151 வாக்குகளும் , ஆதரவாக 62 வாக்குகளும் பதிவாகியிருந்தன.

இதற்கமைய அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணை 89 வாக்குகளால் தோல்வி அடைந்துள்ளது.