கல்முனை கிஷாவின் புதிய தொழில்நுட்பத்தில் உருவான ”சிதடு” நேற்று வெளியிடப்பட்டது – பார்த்து மகிழுங்கள்

தென்னிந்திய சினிமா தரத்தில் பல படைப்புக்களை வழங்கிக்கொண்டிருக்கும் கல்முனை கிஷா பிளிம் மேக்கர்ஸ் உருவாக்கியுள்ள ‘சிதடு’ குறும்படம் நேற்று online இல் வெளியிடப்பட்டது.

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் முன்னிலையில், கலாசார பிரிவின் ஒத்துழைப்புடன் பிரதேச செயலகத்தில் கல்முனை நெற் ஊடக வலையமைப்பால் சுகாதார நடைமுறைகளுடன் வெளியிட்டு வைக்கப்பட்டு, குறும்பட குழுவினரும் பாராட்டப்பட்டனர்.

இக்குறும்படம் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இரவில் மட்டும் படமாக்கப்பட்டுள்ளமையும் இதன் சிறப்பம்சமாகும்

கிஷா பிளிம் மேக்கர்ஸ் இன் ஸ்தாபகர் v.டினோஜனின் தயாரிப்பில் உருவாகியுள்ள இக் குறும்படம் பெரு வரவேற்பை பெற்றுவருகின்றது.

கீழே உள்ள இணைப்பை சொடுக்கி பார்வையிடுங்கள்

SITHADU TAMIL SHORT FILM

Story, Screenplay, Dialogue, Direction – V.Dilojan (Sidhu Vijay)

Cast- Trishanthan, Jasomi, Sajith, Sayanujan, Kisho, Baby Dhiya, Visvalingam, Pavathakar, Dilan

Music & SFX – Sajay ARS

DOP – Tharani, Jana, Thiru, Lithuraj

Lighting – Rajalukshan

Colour- Janakaran

Edit- Sidhu Vijay

Animation – Kohikan

Arrangments – Menu, Guru, Dilan, Harish, Sethu, Russel, Yugashri

Produced By Kisha Film Makers & Entertainment Media

Released By Kalmunai NET