சமத்துவ மக்கள நல ஒன்றியத்தினூடாக சுவிஸ் வாழ் விஜி குடும்பத்தால் கிரானிலும் வீடு


மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாலையடித்தோனா கிராமத்தில் நீண்டகாலமாக வீடின்றி வாழும் குடும்பமொன்றுக்காக வீடமைப்பதற்கு நேற்று அடிக்கல் நடப்பட்டன.
சமத்துவ மக்கள் நல ஒன்றியம் முன்வைத்த வேண்டுகோளை ஏற்று இவ் அமைப்பின் ஐரோப்பாவுக்கான இணைப்பாளர் கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த சுவிஸ் நாட்டில் வாழும் விஜயகுமாரன் ஜீவா தம்பதியினர் நிதிப்பங்களிப்பை வழங்கி உள்ளனர்.
கடந்த மாதம் குறித்த குடும்பத்தினரது வீடு தீயில் எரிந்து நாசமாகியது. இதனால் வீடின்றி நிர்க்கதியான நிலையில் தகரம் மற்றும் பொலித்தீன்; கொண்டு தற்காலிக வீடொன்றில்; சிறு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தனர்.

இக் குடும்பத்தின் நிலைமையை அறிந்து சமத்துவ மக்கள நல ஒன்றியம் நேரில் சென்று பார்வையிட்டு வீடு கட்டி வழங்குவதற்கான முயற்சியினை முன்னெடுத்திருந்தனர்.
இதன் அடிப்படையில் கிரான் பிரதேச செயலாளர் இதற்கான அனுமதியினை வழங்கியிருந்தார்.

சுகாதார நடைமுறைகளுடன் நடைபெற்ற அடிக்கல் நடும் நிகழ்வில் மதகுருக்களான சிவஸ்ரீ ரதிகரன்,சிவஸ்ரீ கமலநாதன் ஆகியோர்களுடன் கிராமசேவகர் கு.கலைராஜ்,சமத்துவ அமைப்பின் பிரதிநிதிகளான மட்டு அம்பாறை இணைப்பாளர் தேசபிமானி ரசிகாந்தன்,சம்மாந்துறை வெளிக்கள ஆய்வாளர் து.காந்தன்,அமைப்பின் பொருளாலர் றுதாகரன்,ஆகியோர் கலந்து கொண்டனர்..