கல்முனையில் இரவு- பகலாக அன்ரிஜன், பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் மரண சம்பவங்களும் கூடிக்கொண்டு வருகின்றன. இதனையடுத்து குறித்த பகுதிகளில் கொரோனா தடுப்பு நடிவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி தலைமையில் நேற்று (27.06.2021) பெரியநீலாவணை, மருதமுனை போன்ற பிரதேசங்களில் இரவு வேளையிலும் திடீர் அன்ரிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதிக சனநெரிசல் காணப்பட்ட வர்த்தக நிலையங்களிலும் அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

எதிர்வரும் தினங்களில் அரச அலுவலகங்கள், வர்த்தக நிலையங்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மற்றும் மரணங்கள் இடம்பெற்ற பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டு பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.