(நிதான்)

அகில இலங்கை ரீதியில் பொறியியல் சம்மேளத்தின் அங்கிகாரம் பெற்ற Civil Engineering, Mechanical Engineering மற்றும் Electrical Engineering பொறியியலாளர்களுக்கு இடையில் இடம் பெற்ற இலங்கை பொறியியலாளர் சேவை பரீட்சையில் (SLES) சுமார் 10,000 க்கும் அதிகமான பொறியியலாளர்கள் பங்கு பெற்றதில் 161 பொறியியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டு இருந்தனர் அதில் ஒருவராக அம்பாறை மாவட்டத்தில் Civil Engineering ஐ பிரதிநிதி படுத்தி பாண்டிருப்பை சேர்ந்த பொறியியலாளர் விஜயதுங்க ப்பிரியந்த அவர்கள் கல்முனை அரச கட்டிடத்திணைக்களத்தில் ( Department of Buildings, Kalmunai) பொறியியல் பிரதிநிதியாக (Executive Engineer) இன்று 13.07.2021 நியமனம் பெற்றுள்ளர்.

மேலும் இவர் University of Jaffna ல் B.Sc.Hons Civil Engineering பட்டபடிப்பை முடித்தவர் என்பது குறிப்பிட தக்கது.

மூன்று பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் இவர் இரண்டாவது ஆவார். இவரது மூத்த சகோதர் பொறியியலாளர். விஜயதுங்க நிஷந்த University of Ruhuna ல் B.Sc.Mechanical Engineering பட்டம் மற்றும் MBA பட்டம் பெற்றுள்ளார் தற்போது கம்பஹா Steel Corporation ல் பொறியியல் முகாமையாளராக (Engineering Manager) கடமையாற்றுகின்றர் என்பதும் குறிப்பிடதக்கது.