கல்முனையில் காட்டு யானைகள் அட்காசம் அதிகரிப்பு; இன்று நற்பிட்டிமுனை ஆலய மதிலையும் சேதமாக்கியுள்ளது!

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள நற்பிட்டிமுனை கிராமத்துக்குள் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் இக்கிராமத்திலுள்ள ஸ்ரீ அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்தின் சுற்றுமதிலை சேதப்படுத்தியோடு அங்கிருந்த பயன்தரு தென்னை மற்றும் வாழைமரங்களை சேதப்படுத்தியுள்ளது. கடந்த வாரமும் நற்பிட்டிமுனையின் குடியிருப்பக்குள்ளும் நள்ளிரவில் உட்புகுந்த யானைகள் மதில்களை உடைத்துதள்ளிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை நேற்று முன்தினம் கல்முனை மாநகர் தரவை சித்தி விநாயகர் ஆலயம் அருகில் வந்த யானைக்கூட்டம் அங்கு அமைந்துள்ள நெற் களஞ்சிய சாலையை சேதப்படுத்தி சென்றுள்ளது.