அம்பாறை திருக்கோவில் கடற்கரைப் பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மீட்கப்பட்டதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சஹாப்தீன் முகமட் அப்றின் என்ற சிறுவனே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் கடந்த 11ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் கடற்கரைக்கு நண்பர்களுடன் நீராடச் சென்ற நிலையில் கடல் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், இன்று திருக்கோவில் மயானத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.