பாண்டிருப்பில் இயற்கை உர உற்பத்தி மாதர் சங்கங்களால் ஆரம்பிப்பு!

செ.டிருக்சன்

நஞ்சற்ற உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் அரசாங்கத்தின் இயற்கை உர உற்பத்தி செயற்றிட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜின் வழிநடத்தலில் மாதர் அபிவிருத்தி உத்தியோகத்தரின் மேற்பார்வையில் இற்கை உரம் உற்பத்தி வேலைத்திட்டம் இடம்பெறுகின்றது.
இதன் ஒரு கட்டமாக பாண்டிருப்பு- 2, 2A, 2B, 2C ஆகிய மாதர் அபிவிருத்தி சங்கங்களின் பங்களிப்புடன் இயற்கை உரம் உற்பத்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வசந்தினி யோகேஸ்வரன்இ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.எஸ்.தயாபரன்இ மாதர் அபிவிருத்தி சங்கங்களின் நிர்வாகிகள்இ உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.