ஊடகவியலாளர்களை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்க வேண்டாமென பிரதமர் அறிவுறுத்தல்

''

வெள்ளைப்பூடு சம்பவம் தொடர்பான பத்திரிக்கை செய்தி குறித்து ஊடகவியலாளர்கள் சிலர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டமைக்கு வருத்தம் தெரிவிப்பதாக வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இதனை அரசாங்கம் என்ற ரீதியில் நிராகரிப்பதாக தெரிவித்த அமைச்சர் ,இவ்வாறான சம்பவம் இடம்பெறக்கூடாத ஒன்று என்பதை மிக பொறுப்புடன் தெரிவிப்பதாகவும் கூறினார். இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக செயல்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்களை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைப்பதை […]

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு நிரந்தர எலும்பியல் அறுவைச்சிகிச்சை நிபுணர் நியமனம்!

''

கல்முனை ஆதார வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக நிரந்தர எலும்பியல் அறுவைச்சிகிச்சை வைத்திய நிபுணர் நியமனம். வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி இரா முரளீஸ்வரனின் அடுத்த கட்ட திட்டமிடலில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் சேவையினை பூரணப்படுத்தும் வகையில்இ எலும்பியல் அறுவைச் சிகிச்சை வைத்திய நிபுணரின் தேவையை சுகாதார அமைச்சுக்கு எடுத்தியம்பியதன் பலனாக இவ் நியமனம் இடம்பெற்றுள்ளது.வைத்தியர் சதுரங்க விதான கமகே (எலும்பியல் அறுவைச் சிகிச்சை வைத்திய நிபுணர்) […]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐரோப்பிய ஒன்றியக் குழு பேச்சு!

''

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐரோப்பிய ஒன்றியக் குழு பேச்சு! இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டத் தூதுக் குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி உட்பட ,கூட்டமைப்பு எம்.பிக்களை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை சந்தித்துக் கலந்துரையாடினார். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. […]

யானைகள் ஊடுறுவும் நற்பிட்டிமுனை வயல் வீதியில் எல்.ஈ.டி மின்குமிழ்கள் பொருத்தப்பட்டன!

''

யானைகள் ஊடுறுவும் நற்பிட்டிமுனை வயல் வீதியில் எல்.ஈ.டி மின்குமிழ்கள் பொருத்தப்பட்டன! அண்மைக்காலமாக குடியிருப்புக்களுக்குள்  யானைகள் ஊடுறுவல் அதிகரித்து காணப்படுகின்றது. கல்முனை மாநகரசபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை கிராமத்தில் அண்மைக்காலமாக யானைகள் குடியிருப்புக்குள் சென்று வீட்டு மதில்களை உடைத்து சென்றதுடன் மரங்களையும் துவம்சம் செய்து சென்றன. ஆற்றங்கரை பக்கம் இருந்து குடியிருப்புக்குள் யானைகள் ஊடுறுவும் நற்பிட்டிமுனை வயல் வீதியில் எல்.ஈ.டி வல்ப்புகள் பொருத்தும் பணிகள் நேற்று (28.09.2021) மேற்கொள்ளப்பட்டது. கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான கென்றி […]

யானைகள் ஊடுறுவும் நற்பிட்டிமுனை வயல் வீதியில் எல்.ஈ.டி மின்குமிழ்கள் பொருத்தப்பட்டன!

''

யானைகள் ஊடுறுவும் நற்பிட்டிமுனை வயல் வீதியில் எல்.ஈ.டி மின்குமிழ்கள் பொருத்தப்பட்டன! அண்மைக்காலமாக குடியிருப்புக்களுக்குள்  யானைகள் ஊடுறுவல் அதிகரித்து காணப்படுகின்றது. கல்முனை மாநகரசபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை கிராமத்தில் அண்மைக்காலமாக யானைகள் குடியிருப்புக்குள் சென்று வீட்டு மதில்களை உடைத்து சென்றதுடன் மரங்களையும் துவம்சம் செய்து சென்றன. ஆற்றங்கரை பக்கம் இருந்து குடியிருப்புக்குள் யானைகள் ஊடுறுவும் நற்பிட்டிமுனை வயல் வீதியில் எல்.ஈ.டி வல்ப்புகள் பொருத்தும் பணிகள் நேற்று (28.09.2021) மேற்கொள்ளப்பட்டது. கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான கென்றி மகேந்திரன், என் இராஜரெட்ணம் ஆகியோரின் முயற்சியினால் குறித்த வீதியில் இன்று மின்குமிழ்கள் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பா.உ. ஹரீஸ் குறுக்குத் தனமாக செயற்படுகின்றார் -தவராசா கலையரசன் MP

''

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் பா.உ. ஹரீஸ் குறுக்குத் தனமாக செயற்படுகின்றார் -தவராசா கலையரசன் MP (கனகராசா சரவணன்,குமணன்)அம்பாறை மாவட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் பா.உ. ஹரீஸ் குறுக்குத் தனமாக செயற்படுகின்றார் எனவே இவரால் தான் தமிழ் பேசும் இனங்களின் உறவுகள் பாதிக்கப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் நாவிதன்வெளியில் உள்ள காரியாலயத்தில்  இன்று செவ்வாய்க்கிழமை (28)  […]

சுகாதார ஊழியர்கள் நேற்று நாடு முழுவதும் பணி பகிஷ்கரிப்பு

''

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் நேற்று(27) தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டதால் வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக வந்திருந்த நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னால் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுகாதார ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி, கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறும் கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தனர். நோயாளர்களை சிரமத்துக்கு ஆளாக்கும் நோக்கத்திற்காக சுகாதார ஊழியர்கள் போராட்டம் மேற்கொள்ளவில்லை. கொவிட் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு […]

காற்றின் வேகம் அதிகரிக்கலாமென எச்சரிக்கை!

''

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரை மற்றும் பேருவளையிலிருந்து காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. வரை அதிகரிக்கலாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, […]

சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடும் சுங்கத் திணைக்களம்

''

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள சுங்கத் திணைக்களம் தயாராகி வருகின்றது. இவ்வாறு தேங்கியுள்ள அத்தியாவசிய உணவு பொருட்கள்  அடங்கிய கொள்கலன்களில், வழக்கு சம்பவங்களுடன் தொடர்புடையவையும் காணப்படுவதனால் இவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்ரிய தெரிவித்துள்ளார். துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு […]