க/மு உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையின் O/L முடிவுகள்!!

''

நடந்துமுடிந்த க.பொ.த சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகியிருந்தன. அதன்படி உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையின் சிறந்த பெறுபேறுகள் பின்வருமாறு: 9Aஜீவதாஸ் கம்சிகாகுணலிங்கம் தசாரிக்கா 8Aமுரளிதரன் கௌதமி 6Aதவபாலன் கோபிகீசன்சசிகுமார் மிருணா

கார்மேல் பற்றிமாவில் 32 மாணவர்கள் 9 A

''

(மிதுஜா ஞானப்பிரகாசம்) நடந்துமுடிந்த க.பொ.த சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் 32 மாணவர்கள் சகல பாடங்களிலும் 9A சித்திபெற்று சாதனை படைத்துள்ளதாக அதிபர் அருட்சகோ. சந்தியாகு அவர்கள் தெரிவித்தார். மேலும் 12 மாணவர்கள் 8A சித்தியும், 18 மாணவர்கள் 7A சித்தியும் பெற்றுள்ளனர் என அதியர் தெரிவித்தார் இதேவேளை எந்த மாணவர்களும் பரீட்சையில் சித்திபெறாமல் இல்லையெனவும் அவர் தெரிவித்திருந்தார்.

கல்முனை வடக்கு பிரதேச பிரிவில் இன்றும் காணி அபகரிப்பு!

''

ஊரடங்கு நேரத்திலும் சட்டவிரோதமான முறையில் முஸ்லிங்களால் காணி ஆக்கிரமிப்பா? பெரிய நீலாவணையில் சம்பவம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பெரிய நீலாவணையில் தமது காணி எனக் கூறி காணியினுள் நுழைந்த சிலர் காணியினை அளந்து எல்லையிட முனைந்தபோது இளைஞர் பொதுமக்கள் கிராம நிலதாரி உட்பட தமிழ் இளைஞர் சேனை கல்முனைப் பிராந்திய உறுப்பினர்கள் விரைந்ததை அடுத்து அவ்விடத்தில் இருந்து காணி அளக்க வந்த குழுவினர் அவ்விடத்தில் ஓடியுள்ளனர்.இதனையடுத்து கல்முனை […]

பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு: உலகில் 770 மில். மக்கள் பாதிப்பு

''

உணவின் எதிர்காலம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் முதல் சர்வதேச உச்சநிலைச் சந்திப்பு நியூயோர்க்கில் ஆரம்பித்துள்ளது. சர்வதேச உணவு முறைகளை மேலும் நிலையாக வைத்துக்கொள்வதற்கான வழிகளை உலகத் தலைவர்கள் ஆராய்கின்றனர். கடந்த ஆண்டு மேலும் 120 மில்லியன் பேர் பட்டினியாலும் ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது. அவர்களையும் சேர்த்து சுமார் 770 மில்லியன் பேர் அவ்வாறு அவதிப்படுகின்றனர். பெரும்பாலும் அந்த எண்ணிக்கை அதிகரித்ததற்கு […]

கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாட்டை முழுமையாக திறக்கலாம்

''

எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை முழுமையாக திறக்க முடியுமென ராகம மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டை நீண்ட நாட்களுக்கு முடக்கியமைக்கான பெறுபேறுகள் தற்போது கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் நாட்டை திறந்தாலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் 25 வீதமான ஊழியர்களை பணிக்கு அழைக்குமாறும், பொது போக்குவரத்துகளில் 50 சதவீத பயணிகளை உள்வாங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.  […]

பெண்கள் அரங்கத்தினால்  உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு !

''

நூருல் ஹுதா உமர் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனின் வழிகாட்டுதலின் கீழ் கொவிட் 19 கொரோணா தொற்று காரணமாக காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு “பெண்கள் அரங்கத்தினால்” உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனிதா பிரதீபன், சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களும் சிரேஷ்ட முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.புண்ணியநாதன் உட்பட பலரும் கலந்துகொண்டு […]

அபிவிருத்தியை ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை – காரைதீவில் அமைச்சர் விமலவீர

''

(அரவி வேதநாயகம்)எந்தவொரு இக்கட்டான தருணத்திலும் நாட்டின் அபிவிருத்திப் பணிகளை அரசு ஒருபோதும் நிறுத்தவில்லையென இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார். காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற “கம சகம பிலிசண்டக் – 2022” நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். 2022 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளை ஆராயும் “கம சமக பிலிசண்டக் – 2022” கலந்துரையாடல் நிகழ்வு நேற்று (24) காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. […]

இராஜாங்க அமைச்சர் வியாளேந்திரன் நேரடி விவாதத்துக்கு வர வேண்டும் – கல்முனை விகாராதிபதி

''

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனை நேரடி விவாதத்துக்கு அழைக்கும் கல்முனை விகாராதிபதி  -கேதீஸ்-இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அரசியல் நடப்புகள் தொடர்பாக நேரடி விவாதத்துக்கு வர வேண்டும் என்று கல்முனை.   சுபத்ரா ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரட்ண தேரர் பகிரங்க சவால் விடுத்து உள்ளார். இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை காலை விகாரையில் ரன்முத்துக்கல சங்கரரட்ண தேரரை சந்தித்து அவர்களுடைய தொழிற்சங்க போராட்டத்துக்கு ஆதரவு கோரினர்.   இதை […]

கமு\ஸ்ரீ மாமாங்க வித்தியாலய அதிபராக திருமதி.இந்திரசோதி அருள்ஞானமூர்த்தி கடமைகளையேற்றார்!

''

கமு\ஸ்ரீ மாமாங்க வித்தியாலய அதிபராக திருமதி.இந்திரசோதி அருள்ஞானமூர்த்தி கடமைகளையேற்றார்! (செல்வராஜா டிருக்சன்) கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக திருமதி.இந்திரசோதி அருள்ஞானமூர்த்தி நேற்று கடமையை பொறுப்பேற்றார். இங்கு அதிபராக இகடமையாற்றிய .என்.உதயகுமார் இடமாற்றம் பெற்று வேறு பாடசாலைக்கு செல்வதனால் பாடசாலையின் புதிய அதிபராக திருமதி.இந்திரசோதி அருள்ஞானமூர்த்தி கடமைகளை கோட்டக் கல்வி அதிகாரி திரு.சரவணமுத்து முன்னிலையில் பொறுப்பேற்றுள்ளார். புதிய அதிபராக கடமையேற்றுள்ள இவர் 33வருடங்களுக்கு(1988.06.04) மேலாக கல்விச் சேவையாற்றி வருகின்றமை […]