நாசிவன்தீவு அடிப்படை வசதிகளின்றி தத்தளிக்கும் கிராமம்! தமிழ் அரசியல் தலைவர்கள், எம்பிக்கள் இருந்தும் அல்லல்படும் மக்களை கவனிப்பது யார்?

''

நாசிவன்தீவு அடிப்படை வசதிகளின்றி தத்தளிக்கும் கிராமம்! தமிழ் அரசியல் தலைவர்கள், எம்பிக்கள் இருந்தும் அல்லல்படும் மக்களை கவனிப்பது யார்? (வ.சக்திவேல்)      மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்குப் பக்கமாக மட்டு நகரிலிருந்து சுமார் 35 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது கோரளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேசமாகும். இந்த வாழைச்சேனைப் பிரதேசத்தில் நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட பகுதிதான் நாசிவன்தீவு கிராமமாகும். அக்கிராம மக்கள் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகத் […]

ஹெல்விட்டாஸ் ஸ்ரீலங்கா நிறுவனமும் உலர் உணவுப்பொதிகளை வழங்கி வருகின்றது.

''

ஹெல்விட்டாஸ் ஸ்ரீலங்கா நிறுவனமும் உலர் உணவுப்பொதிகளை வழங்கி வருகின்றது. (வி.சுகிர்தகுமார்)   கொவிட் தொற்று மற்றும் பயணத்தடை காரணமாக தமது தொழிலை இழந்த மக்களின் வாழ்க்கை நிலையினை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் வகையில் பல்வேறு சமூக அமைப்புக்கள் பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்கி வருகின்றது.   இச்செயற்பாட்டில் ஹெல்விட்டாஸ் ஸ்ரீலங்கா நிறுவனமும் அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமூகத்தின் ஊடாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று மூவினங்களுக்குமான உலர் உணவுப்பொதிகளை வழங்கி வருகின்றது. […]

இயற்கை உர உற்பத்தி: அம்பாரை மாவட்டத்தில்முதற்கட்டம் 50,000 மெ. தொ – மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன்

''

இயற்கை உர உற்பத்தி: அம்பாரை மாவட்டத்தில்முதற்கட்டம் 50,000 மெ. தொஇயற்கை உரம் உற்பத்தி – அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்யும் ஜனாதிபதியின் விஷேட வேலைத்திட்டத்திற்கு அமைவாக இயற்கை உரம் உற்பத்தி செய்யும் வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றன. அம்பாறை மாவட்டத்தில்  முதற்கட்டமாக ஐம்பதாயிரம் மெற்றிக்தொன் இயற்கை உரத்தை  உற்பத்தி செய்யும் வகையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் […]

நற்பிட்டிமுனையில் நள்ளிரவில் யானைகள் அட்டகாசம்!

''

நற்பிட்டிமுனையில் நள்ளிரவில் யானைகள் அட்டகாசம்! அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் அண்மைக்காலமாக யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றன. தற்போது ஊர் மனைகளுக்குள்ளும் நள்ளிரவு வேளைகளில் யானைகள் உட்புகுந்து அட்டகாசம் செய்கின்றன. நேற்று முன்தினம் கல்முனை நற்பிட்டிமுனை கிராமத்தில் நள்ளிரவில் சென்ற யானைகள் மதில்களையும் உடைத்து தள்ளியுள்ளதுடன் வாழை மரங்களையும் பிடுங்கி சாய்த்துள்ளன. ஊர்மக்கள் சேர்ந்து யானைகளை ஊருக்கு வெளியே விரட்டி இருந்தனர்.

நியூயோர்க் சென்றடைந்த ஜனாதிபதிக்கு ஐ.நா பிரதிநிதி வரவேற்பு!

''

நியூயோர்க் சென்றடைந்த ஜனாதிபதிக்கு ஐ.நா பிரதிநிதி வரவேற்பு! ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, அமெரிக்கா சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நியூயோர்க் நகரை சென்ற டைந்துள்ளார். அந்நாட்டு நேரப்படி, 18ஆம் திகதி பி.ப 2.30 மணியளவில், நியூயோர்க் ஜோன் எஃப் கெனடி சர்வதேச விமான நிலையத்தை அடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழுவினரை, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் வரவேற்றார். ‘கொவிட்-19 […]

கல்முனை வடக்கு MOH பிரிவில் 20 – 30 வயதுக்குட்பட்வர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பமானது!

''

கல்முனை வடக்கு MOH பிரிவில் 20 – 30 வயதுக்குட்பட்வர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பமானது! கல்முனை சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் 20 – 30 வயதுக்கட்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணி இடம்பெற்றுவருகிறது. கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்றும் நாளையும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெறுகிறது.காலை 8 மணி முதல் மாலை 4.00 மணிவரை தடுப்பூசிகள் ஏற்றும் பணி […]

31 வருட கல்விச்சேவையில் இருந்து அதிபர் குலசேகரம் வரதநாதன் ஓய்வு

''

31 வருட கல்விச்சேவையில் இருந்து அதிபர் குலசேகரம் வரதநாதன் ஓய்வு (துறைநீலாவணை நிருபர் செல்லையா பேரின்பராஜா)கல்முனை மணற்சேனை சுவாமி விபுலாநந்த வித்தியாலய அதிபராக பணியாற்றிய குலசேகரம் வரதநாதன்; அண்மையில் (03.09.2021) தனது கவ்விச்சேவையில இருந்து ஓய்வுபெற்றுள்ளார். 20.03.1990 இல் ஆசிரிய நியமனம் பெற்ற இவர் விஞ்ஞான பாட ஆசிரியராக நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயம் நற்பிட்டிமுனை சிசிவக்தி மனாவித்தியாலயம் சேனைக்குடியிருப்பு கணேஷா மகாவித்தியாலயம் பெரிய நீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயம் கல்முனை ஸ்ரீ […]

பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்வோருக்கு அதிக தண்டப்பணம்!

''

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத்தை 100,000 ரூபாவாக அதிகரிக்கும் சட்டத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்தார். எதிர்வரும் புதன்கிழமை (22) பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைத் (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. இதன்போதே இத்திருத்தம் முன்வைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மீனவரைக் காணவில்லை

''

மீனவரைக் காணவில்லை ஹஸ்பர் ஏ ஹலீம்_திருகோணமலை – குச்சவெளி, ஜாயா நகரை சேர்ந்த மீனவர் ஒருவர் அட்டை பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றவர் எட்டு  நாட்களாகியும் காணவில்லை எனக் கூறப்படுகின்றதுசென்ற திங்கட்கிழமை குச்சவெளி யிருந்து புறப்பட்டு, பருத்தித் துறை குடாரப்பு சென்று அங்கியிருந்து 30 மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் அட்டைப் பிடிப்பதற்குச் சென்றவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். காணாமல் போனவருடன் படகு (போட்) ஓட்டுநரும் போயுள்ளார். அட்டைப் பிடிப்பதற்காக […]