ஜனாதிபதி கோட்டபாய இன்று அமெரிக்கா பயணமானார் – தற்காலிக தலைவராக சபாநாயகர் மஹிந்த யாப்பா

''

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று நாட்டில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ச அமெரிக்கா பயணமானார். சிறிலங்காவின் தற்காலிக தலைவராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன செயற்பவுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் நாட்டின் தற்காலிக தலைவராகவே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனத செயற்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இராஜனாமா

''

மேலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இராஜனாமா ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் இலங்கைக்கான அமெரிக்க மற்றும் மெக்ஷிகோ தூதுவராக பதவி ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் கைதிகளுக்கு நீதியை பெற்று கொடுப்பதற்காக கிழக்கு தமிழர் ஒன்றியம் முனைப்புடன் செயலாற்றும் – செயலாளர் குணாளன்

''

தமிழ் கைதிகளுக்கு நீதியை பெற்று கொடுப்பதற்காக கிழக்கு தமிழர் ஒன்றியம் முனைப்புடன் செயலாற்றும் – செயலாளர் குணாளன் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதியை பெற்று கொடுப்பதற்கு கிழக்கு தமிழர் ஒன்றியம் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று இதன் செயலாளரும், ஊடக பேச்சாளருமான வி. குணாளன் தெரிவித்தார். கல்முனை ஊடக மையத்தில் நேற்று சனிக்கிழமை ஒன்றியத்தால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் தலைவர் ஏ. குணசேகரன், அம்பாறை மாவட்டத்துக்கான பொருளாளர் எஸ். நாகேந்திரன் ஆகியோரும் […]

மட்டக்களப்பில் இன்னாள். முன்னாள் எம்.பிக்கள் உட்பட 10 பேருக்கு திலீபன் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

''

மட்டக்களப்பில் இன்னாள். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட 10  பேருக்கு திலீபன் நினைவேந்தல் நினைவு கூறுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு  (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிதரன், பா. அரியேந்திரன். மட்டு மாநகரசபை மேஜர் உட்பட 10 பேருக்கு எதிராக தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நினைகூருவதற்கு  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (17) தடைஉத்தரவு பிறப்பித்து கட்டளையிட்டுள்ளது என […]

தியாகி திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிக்கவேண்டாம் என அரியநேத்திரனுக்கு தடை உத்தரவு!

''

தியாகி திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிக்கவேண்டாம் என அரியநேத்திரனுக்கு தடை உத்தரவு! தியாகி திலீபனின் 34,வது ஆண்டு நினைவு இம்மாதம் செப்டம்பர் 26,ல் இடம்பெறவுள்ளமையால் அதனை தடைசெய்யும் விதமாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற தடை உத்தரவு கடிதம் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கு இன்று (18/09/2021) அவரின் இல்லத்திற்கு சென்று கொக்கட்டிச்சோலை பொலிசார் கையளித்தனர். இந்த நீதவான் நீதிமன்ற கட்டளையில் பா.அரியநேத்திரனுடன் மேலும் எட்டுப்பெயருக்கு எதிராக தடை […]

கல்முனை RDHS பிரிவில் 20 – 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்!

''

கல்முனை RDHS பிரிவில் 20 – 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்! வி.சுகிர்தகுமார் கல்முனை பிராந்தியத்தில் 20 வயது தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் .சுகுணன் தலைமையிலான வைத்திய குழுவினரால் இன்று (18) ஆரம்பிக்கப்பட்டது. இன்று ஐம்பதாயிரம் சினோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பபெற்றதுடன் 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் தடுப்பூசி ஏற்றப்படும் பணி […]

இன வெறியின் உச்சமே கைதிகள் மீதான அராஜகம் – கஜேந்திரன் எம். பி

''

இன வெறியின் உச்சமே கைதிகள் மீதான அராஜகம் – கஜேந்திரன் எம். பி  இழந்த  செல்வாக்கை தூக்கி நிமிர்த்தவே அமைச்சர் காடைத்தனம் உள்ளக அனுசரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் தமிழ் கூட்டமைப்பும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்     -த. தர்மேந்திரா- சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கம் இழந்து போய் உள்ள செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாக கொண்டே இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயால் அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது பாரதூரமான […]

மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி : ஜனாதிபதி பணிப்பு

''

மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி : ஜனாதிபதி பணிப்பு 15 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நடவடிக்கையின் போது ஏனைய தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இராணுவத்தளபதி குறிப்பிட்டார்.

இன வெறியின் உச்சமே கைதிகள் மீதான அராஜகம்- கஜேந்திரன் எம். பி

''

இன வெறியின் உச்சமே கைதிகள் மீதான அராஜகம் இழந்த  செல்வாக்கை தூக்கி நிமிர்த்தவே அமைச்சர் காடைத்தனம்உள்ளக அனுசரணைக்கு  ஒத்துழைப்பு வழங்கும் தமிழ் கூட்டமைப்பும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்                                           த. தர்மேந்திரா சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கம் இழந்து போய் உள்ள செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாக கொண்டே இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயால் அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது பாரதூரமான அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளதென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எம். பி ‘கல்முனை நெற்’ க்கு தெரிவித்தார்.  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம். பி மற்றும் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எம். பி ஆகியோர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு கடந்த வியாழக்கிழமை தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட சென்றனர்.  முதலில் இவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டது. பிற்பாடு இராஜாங்க அமைச்சரால் நேரடியாக அச்சுறுத்தப்பட்ட இரு கைதிகளையும் பொலிஸாரின் பிரசன்னத்துக்கு மத்தியில் சந்தித்து பேச அனுமதித்தனர்.  இது தொடர்பாக கல்முனைநெற் தொடர்பு கொண்டு கேட்டபோது செல்வராசா கஜேந்திரன் எம். பி தெரிவித்தவை வருமாறு  தமிழ் அரசியல் கைதிகள் அனைவருக்கும் அங்கு பாரதூரமான உயிராபத்து நிலவுகின்றது. நடந்து முடிந்த சம்பவத்தின் பின்னணியில் இவர்கள் பழிவாங்கப்படலாம் என்கிற பாரதூரமான சூழல் கண் முன் நிற்கின்றது. அவர்களால் எம்முடன் சுதந்திரமாக உரையாடக் கூட முடியவில்லை. அச்சத்தில் உறைந்து காணப்பட்டனர்.  கடந்த 73 வருடங்களாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வன் செயல்கள் மற்றும் படுகொலைகள் ஆகியன மாறி மாறி வந்த அரசாங்கங்களாலேயே  திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டன. 1983 கறுப்பு ஜூலை கலவரத்தை ஜே. ஆர். ஜயவர்த்தன தலைமையிலான அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொண்டு இருந்தது.   ஆனால், தமிழ் மக்கள் மீது காலம் காலமாக தொடர்ந்தேச்சையாக கட்டவிழ்த்து விடப்பட்டு வந்திருக்கின்ற வன்செயல்கள் மற்றும் படுகொலைகள் ஆகியவற்றுக்கு எந்த அரசாங்கங்களுமே பொறுப்பேற்று இருக்கவில்லை. இவற்றின் உச்ச பட்சமாகவே இராஜாங்க அமைச்சரால் தமிழ் கைதிகள் அச்சுறுத்தப்பட்டு உள்ளார்கள்.   சிங்கள மக்கள் மத்தியில் இழந்து போயுள்ள அரசாங்கத்தின் செல்வாக்கை மீண்டும் தூக்கி நிமிர்த்துகின்ற அரசாங்கத்தின் நிகழ்ச்சி ந்நிரலுக்கு அமையவே இராஜாங்க அமைச்சரால் தமிழ் கைதிகள் பலி கடாக்கள் ஆக்கப்பட்டு இருக்கின்றனர் என்று எமது கட்சி விசுவாசிக்கின்றது.  இதே நேரத்தில், தமிழ் அரசியல் கைதிகள் மீது இராஜாங்க அமைச்சரால் நடத்தப்பட்ட அராஜகத்துக்கு அரசாங்கம் மாத்திரம் அன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பும் பொறுப்பேற்க வேண்டும் என்பது எமது வலுவான நிலைப்பாடாகும்.  ஏனென்றால் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பே பாதுகாத்து வருகின்றது. தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்களுக்கு உள்ளக பொறிமுறை மூலம் விசாரணை நடத்தி தீர்வு காண்பார்கள் என்று அரசாங்க தரப்பால் ஜெனிவாவில் சொல்லப்பட்டபோதெல்லாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதற்கு அனுசரணை வழங்கியது.  பொறுப்பு கூறல் என்று ஒன்று இல்லாத தன்மையும், தமிழர்கள் மீது எதை செய்தாலும் கேட்பதற்கு எவரும் இல்லை என்கிற துணிச்சலுமே இராஜாங்க அமைச்சரின் அராஜாகத்துக்கு ஊக்கிகளாக அமைந்து நிற்கின்றன. இனியும் எதுவும் நடக்கலாம் என்கிற அச்சம் தொடரவே செய்கின்றது.  இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீதான வழக்குகளின் தீர்ப்புகள் வழங்கப்படுகின்ற வரை அவர்களை தொடர்ந்தும் அநுராதபுரம் சிறைச்சாலையின் தடுத்து வைத்திருப்பது என்பது பேராபத்தானது. எனவே, அவர்களை தமிழர் பிரதேசங்களில் இருக்க கூடிய சிறைச்சாலைகளுக்கு உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோருகின்றோம்.

கைவிரித்தனர் மாவையும், சீ வீ கேயும்; கவலையில் அழுதார் சத்தியலிங்கம்!

''

கைவிரித்தனர் மாவையும், சீ வீ கேயும்; கவலையில் அழுதார் சத்தியலிங்கம்! (சொக்கலிங்கம் ) தமிழ்த் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்கள்’ என்ற தலைப்பிடப்பிடப்பட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடருக்காக தமிழரசுக்கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்இ மட்டக்களப்பு மாவட்ட மேயர் ஆகியோர் கையொப்பமிட்ட கடிதமொன்று  வெளியாகியிருந்தது. இந்தக்கடிதம் அனுப்பப்பட்டதா? இல்லையா? என்பது தொடர்பில் சர்ச்சைகள் இன்னமும் நீடிக்கின்ற நிலையில்இ குறித்த கடிதத்தில் கையொப்பமிட்டவர்களிடத்தில் […]