2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, தற்போது குழுநிலை விவாதம் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.