(டினேஸ்)

திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் சிரமதானப்பணி மற்றும் நினைவேந்தல் நாள் நிகழ்வு தொடர்பான செயற்குழுவினர் தெரிதல் சம்பந்தமான கலந்துரையாடல் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கந்தசாமி இன்பராசா தலைமையில் சம்பூர் விநாயகர் ஆலய பாலர் பாடசாலை முன்றலில் (17) திகதி நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வு உயிர் நீத்த மாவீரர்களுக்காக இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்னர் கலந்துரையாடல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது திருமலை மாவட்டத்தில் உள்ள மாவீரர் குடும்பத்தாரின் உறவினர்கள் முன்னாள் போராளிகள் சிவில் அமைப்புக்கள் நலன் விரும்பிகள் மற்றும் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் அடங்களாக 80 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது துயிலுமில்ல சிரமதானப்பணி மற்றும் கார்த்திகை 27 ஆம் நாள் மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கான ஏற்பாடுகள் தொடர்பான வேலைத்திட்டங்கள் 12 பேர் அடங்களாக குழு தெரிவு செய்யப்பட்டு செயற்பாடுகள் பிரித்துக் கொடுக்கப்பட்டதாக ஒன்றியத்தின் தலைவர் கந்தசாமி இன்பராசா கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதெ அவர் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.