(டினேஸ்)

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெறவுள்ள மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பிலான முதலாம் கட்ட கலந்துரையாடல் நிகழ்வு தாண்டியடி கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் கஞ்சிகுடிச்சாறு, தாண்டியடி, காஞ்சிரன்குடா, தங்கவேலாயுதபுரம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மாவீரர் குடும்ப உறவுகள், முன்னாள் போராளிகள் கிராம பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் மாவீரர் துயிலுமில்ல சிரமதானம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.