சவளக்கடை மண்டூர் பிரதான வீதியில் ஞாயிற்று கிழமை (5) மாலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நாவிதன்வெளி 15ஆம் கிராமத்தை சேர்ந்த 27 வயதுடைய நந்தகோபன் என்பவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.


மட்டக்களப்பு போரதீவிலிருந்து அம்பாரை பிரதேசத்திற்கு கல் ஏற்றுவதற்காக சவளக்கடை நோக்கி பயணித்த லொறியும் 15ஆம் கிராமத்திலிருந்து தனது அம்மாவின் வீட்டுக்கு அன்னமலை வேப்பயடி பிரசேத்தினை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஆலமரத்தடி பிரதேசத்தில் மோதியதன் காரணமாகவே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பில் லொறியைச் செலுத்திய களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன்மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.