(டினேஸ்)

கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரின் முயற்சி மற்றும் வழிகாட்டலின் மூலம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 4.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மானிக்கப்பட்ட கார்பெட் முற்றம் திறந்து வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் முரளிதரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர் எந்திரி தர்மரெட்ணம், பிரதம பொறியியலாளர் எந்திரி பத்மராஜா நிறைவேற்றுப் பொறியியலாளர் எந்திரி சசிநந்தன், வலயக் கல்விப் பணிப்பாளர் பாஸ்கரன், கோட்டைக் கல்விப் பணிப்பாளர் அருள்பிரகாசம், மட்டக்களப்பு மாநகரப் பிரதி ஆணையாளர் தனஞ்செயன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலை சமுகத்தின் வேண்டுகொளுக்கிணங்க கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் துரைராசசிங்கம் அவர்கள் மத்திய வீதி அபிவிருத்தி அமைச்சருடன் தொடர்பினை ஏற்படுத்தி வீதி அபிவிருத்தி அதிகார சபையினூடாக இப் பாடசாலைக்கான கார்பெட் முற்றம் அமைக்கும் செயற்திட்டத்திற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவுற்ற நிலையில்  முன்னாள் அமைச்சர் மற்றும் அதிதிகளினால் திறந்து வைக்கப்பட்டது.

இதே போன்று முன்னாள் அமைச்சரின் முயற்சியின் மூலம் 01 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியிலும் கார்பெட் முற்றம் அமைக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.