பெற்றோல் விநி­யோ கம் எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை வழ­மைக்­குத்­தி­ரும்­ப­வுள்­ளது. அதுவரையில் பாவனைக்குத் தேவை­யான பத்­தா­யிரம் மெட்­ரிக்தொன் பெற்றோல் கையிருப்பில் உள்­ளது. எனினும் டீசல் விநி­யோ­கத்தில் எவ்­விதத் தட்­டுப்­பாடும் இல்லை.

எனவே டீசலை விநி­யோ­கிக்­காது பதுக்கும் எரி­பொருள் நிரப்பு நிலை­யங்­களின் அனு­ம­திப்­பத்­தி­ரத்தை இரத்­து­செய்­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ளோம். அத்­துடன் போத்­தல்கள் மற்றும் சிறிய பாத்­தி­ரங்­களில் பெற்றோல் விநி­யோ­கிப்­பதை தடுக்­க­வுள்­ளோம்  என்று பெற்­­றோ­லிய வளங்கள் அபி­வி­ருத்தி அமைச்சர் அர்­ஜுண ரண­துங்க தெரி­வித்தார்.

பெற்­றோ­லிய வளங்கள் அபி­வி­ருத்தி அமைச்சில் நேற்று மாலை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

எல்.ஐ.ஓ.சி. நிறு­வ­னத்­தி­னூ­டாக கடந்த மாதம் 15 ஆம்  திகதி பெற்றோல் கப்பல் ஒன்று நாட்­டுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. எனினும் அக்­கப்­ப­லி­லுள்ள பெற்­றோலை இரு­முறை பரி­சோ­த­னைக்­குட்ப டுத்­தி­ய­போதும் அதன் தரம் உறு­தி­செய்­யப்­ப­ட­வில்லை. அதனால் அக்­கப்­பலை கடந்த 17 ஆம் திகதி நாம் நிரா­க­ரித்­த­தோடு திருப்பி அனுப்­பு­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுத்தோம். எனினும் அக்­கப்பல் இன்னும் திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தில் தரித்து நிற்­கி­றது. ஏனெனில் எவ்­வா­றா­வது அதி­லுள்ள பெற்­றோலை வழங்­கு­வ­தற்கே அந்­நி­று­வனம் எதிர்­பார்த்­துள்­ளது.

சாத­ரா­ண­மாக ஒரு கப்­ப­லி­லுள்ள எண்ணெய் நிரா­க­ரிக்­கப்­பட்டால் அதற்குப் பதி­லாக மற்­று­மொரு கப்­பலை குறித்த நிறு­வனம் மாற்­றீ­டாக அனுப்ப வேண்டும். ஆகவே அந்­நி­று­வனம் கடந்த முதலாம் திக­தி­ய­ள­லவில் வேறு கப்பல் ஒன்றைப் பெற்றுத் தரு­வ­தற்கு உடன்­பட்­டது. அயினும் அவ்­வாறு உடன்­பட்டு சில தினங்­களின் பின்னர் குறித்த நிறு­வனம் மாற்­றீ­டாக மற்­று­மொரு கப்பல் வழங்க முடி­யா­தெனக் குறிப்­பிட்­டது.

மேலும் இலங்கை பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னம் நவம்பர் மாதம் மூன்றாம் திக­தி­ய­ளவில் மற்­று­மொரு எண்­ணெய்க்­கப்பல் ஒன்றை நாட்­டுக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்கு ஏற்­பா­ட­கி­யி­ருந்­தது. இருந்­த­போ­திலும் அக்­கப்­பலும் இன்னும் நாட்டை வந்­த­டை­ய­வில்லை. ஏற்­பா­டா­கி­யி­ருந்த தினத்தை விட ஆறு நாட்கள் கடந்த பின்னர் எதிர்­வரும் ஒன்­பதாம் திக­தியே அக்­கப்பல் நாட்டை வந்­த­டை­ய­வுள்­ளது. எனவே கடந்த மூன்று நான்கு வருட காலத்தில் இவ்­வாறு எந்­த­வொரு கப்­பலும் காலம் தாழ்த்தி வந்­த­தில்லை. இம்­மு­றையே இவ்­வா­றான கால தாமதம் ஏற்­பட்­டுள்­ளது. எனினும் குறித்த கப்­பலை, நிய­மிக்­கப்­பட்­டுள்ள தினத்­திற்கு ஒரு தினம் முன்­கூட்டி கொண்­டு­வ­ரு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம்.

மேலும் எல்.ஐ.ஓ.சி. நிறு­வனம் தனது உடன்­ப­டிக்­கைக்குப் புறம்­பாகச் செயற்­பட்­டமை மற்றும் இலங்கை பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னத்தால் நவம்பர் மாதம் மூன்றாம் திகதி நாட்­டுக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்கு ஏற்­பா­டா­கி­யி­ருந்த கப்­பலின் தாமதம் என்­பது குறித்த விசா­ரணை மேற்­கொண்டு நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கும் எதிர்­பார்­துள்ளோம்.

அத்­துடன் மின் தடை கார­ண­மாக கடந்த 31 ஆம் திகதி சபு­கஸ்­கந்த எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தின் பணி தடைப்­பட்­டது. அதனால் மூன்று தினங்கள் வரையில் அங்கு சுத்­தி­க­ரிப்பு நட­வ­டிக்கை இடம்­பெ­ற­வில்லை. ஆகவே அக்­காலப் பகு­தியில் நாள் ஒன்­றுக்கு 550 மெட்­ரிக்தொன் வரையில் பெற்றோல்  சுத்­தி­க­ரிப்­புக்­குக்கு உட்­ப­டுத்த முடி­ய­வில்லை.

இவ்­வா­றான தடைகள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்த வேளையில்  எல்.ஓ.ஐ.சி. நிறு­வனம், 16 ஆயிரம் மெற்­றிக்தொன் பெற்றோல் கொண்ட கப்பல் ஒன்றை பெற்­றுத்­த­ரு­வ­தாக  கடந்த நான்காம் திகதி தெரி­வித்­தது. அதனை நான்கு நாட்­க­ளுக்குள் பெற்றுத் தரு­வ­தா­கவும் உடன்­பட்­டது. எனினும் குறித்த பெற்­றோலை பெறு­வ­தாயின் தம்­மி­ட­முள்ள குறிப்­பிட்ட தொகை டீச­லையும் கொள்­வ­னவு செய்ய வேண்டும் என நிபந்­தனை விதித்­தது. எனினும் அந்த டீச­லி­னதும் தரம் உறு­தி­செய்­யப்­ப­ட­வில்லை. ஆகவே அக்­கப்­ப­லையும் நிரா­க­ரிக்க வேண்டி ஏற்­பட்­டது.

மேலும் நாம் திருப்பி அனுப்­பிய கப்­ப­லி­லுள்ள பெற்­றோலை கொள்­வ­ன­வு­செய்­யு­மாறு அர­சியல் மற்றும் வர்த்­தக சமு­கத்­தினால் எனக்கு அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­பட்­டது. அது தொடர்பில் நான் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ரிடம் முறை­யிட்டேன். எவ்­வித அழுத்­தங்­க­ளுக்கும் அடி­ப­ணி­யாது பாதிப்­பில்­லாத தீர்­மா­னத்தை மேற்­கொள்­ளு­மாறே  அவ்­வி­ரு­வரும்  வேண்­டிக்­கொண்­டனர். மேலும் தரம் உறு­தி­செய்­யப்­ப­டாத குறித்த கப்­ப­லி­லுள்ள பெற்­றோலை திருப்பி அனுப்­பாது பாவ­னைக்கு வழங்­கி­யி­ருப்பின் நாட்டில் பாரிய பாதிப்பு ஏற்­பட்­டி­ருக்கும்.

இருந்­த­போ­திலும்  பெற்றோல் பிரச்­சினை பாரி­ய­ளவில் விஸ்­வ­ரூபம் எடுக்கும் வகையில் தட்­டுப்­பாடு இருக்­க­வில்லை. எனினும் பெற்­றோ­லி­யத்­துறை ஊழி­யர்கள் பணி பகிஷ்­க­ரிப்பில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக குறுஞ்­செய்­தி­யொன்று பகி­ரப்­பட்­டது. அத­னா­லேயே மக்கள் வழ­மைக்கு மாறாக பெற்றோல் நிரப்­பு­வ­தற்கு எரி­பொருள் நிரப்பு நிலை­யங்­க­ளுக்கு  முண்­டி­ய­டிக்கத் தொடங்­கினர்.

மேலும் போத்தல் மற்றும் ஏனைய சிறிய பாத்­தி­ரங்­களில் பெற்றோல் நிரப்­பிக்­கொண்டு அதனை வெளியில் அதிக விலைக்கு விற்­ப­னையும் செய்கின்­றனர். அவ்­வா­றான வர்த்­தகம் குறித்த தினங்­களில் இ்டம்­பெ­று­வ­த­னா­லேயே எரி­பொருள் நிரப்பு நிலை­யங்­களில் பாரிய வரி­சை­களைக் காண­மு­டி­கி­றது. எனவே அவ்­வாறு போத்­தல்கள் மற்றும் சிறிய பாத்­தி­ரங்­களில் பெற்றோல் விநி­யோ­கிப்­பதைத் தவிர்க்­கு­மாறு அறி­வித்தல் வழங்­கி­யுள்ளோம்.

எனவே இலங்கை பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னத்தின் ஏற்­பாட்டில் பெற்றோல் கொண்­டு­வரும் எண்­ணெய்க்­கப்பல் எதிர்­வரும் எட்டாம் திகதி இரவு நாட்டை வந்­த­டை­ய­வுள்­ளது. ஆகவே எதிர்­வரும் ஒன்­பதாம் திக­தி­யி­லி­ருந்து வழ­மை­போன்று பெற்றோல் விநி­யோகம் இடம்­பெ­ற­வுள்­ளது.  மேலும் எதிர்­வரும் ஒன்­பதாம் திகதி வரை­யி­லான காலப்­ப­கு­திக்­கு­ரிய பாவனைக்குப் போதுமான பத்தாயிரம் மெட்ரிக்தொன் பெற்றோல் கைவசம் உள்ளது. ஆகவே நாள் ஒன்றுக்குக்கு 2500 மெட்ரிக்தொன் பெற்றோல் விநியோகிக்க முடியும்.

அத்துடன் டீசலுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை. இன்னும் மூன்று வாரங்களுக்குத் தேைவயான டீசல் இருப்பில் உள்ளது. எனினும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் டீசல் விற்பனையினையும் நிறுத்தியுள்ளன. ஆகவே அது தொடர்பில் எதிர்காலத்தில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அவ்வாறான எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களை தொடர்ந்தும் பேணுவதா என்பது குறித்து தீர்மானிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.