பெரியநீலாவணையில் மக்கள் சகவாழ்வு அமைப்பினால் நேற்று (07) சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது மழை காலம் என்பதால் நீர்  தேங்கி நின்று டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும்,  என அடையாளம் காணப்பட்ட இடங்களில் இச் சிரமதானப் பணியினை மேற்கொண்டது.
  பெரியநீலாவணை பொது மக்கள் மற்றும்  மக்கள் சகவாழ்வு அமைப்பின் உறுப்பினர்கள் சிரமதானப்பணியில் பங்கெடுத்தனர்.
சௌவியதாசன்