பெரிய நீலாவணை கிராமத்தில் அமைக்கப்பட்ட பல்தேவைக்கட்டிடம் ஒன்று பொது மக்களினால் பயன்படுத்தப்படாமல்   பாவனையற்று பாழடைந்து காணப்படுகிறது.

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமையப்பெற்ற அம்மா தொடர் மாடி குடியிருப்புக்கு  அண்மித்ததாக பெரியநீலாவணை மத்தியவீதியில் இக்கட்டிடம்  அமைந்துள்ளது.

சுமார் 1000 பேர் ஒன்று கூடக்கூடியதாக, இக்கிராம மக்களின்  பொது  நிகழ்வுகள், திருமண நிகழ்வுகளை நடாத்தும் வகையில் பல இலட்சம் ரூபாய் செலவில் சோஆ எனும் அரசசார்பற்ற நிறுவனத்தால்  இந்த பல்தேவைக்கட்டிடம் அமைத்துகொடுக்கபப்ட்டது. ஆனால் இக் கட்டிடம் மக்கள் பயன்படுத்தாமல் பராமரிப்பின்றி பாழடைந்து சின்னாபின்னமாகி வருகிறது.

பயன்மிக்க இந்த கட்டிட வளத்தினை இந்நிலையில் வைத்துள்ளமை
 இக்கிராம  மக்களின் கவனயீனமா?
 
 இக்கட்டிடம் அமையப்பெற்றுள்ள கிராம சேவகர் பிரிவை சேர்ந்த   மாதர் ,கிராம அபிவிருத்தி சங்கங்களின் பொறுப்பற்ற தன்மையா?
 
 அல்லது அதிகாரிகளின் கவனயீனமா?
இக்கட்டிடத்தினை  மேலும் பாழடைந்துபோக விடாமல்   கல்முனை தமிழ் பிரதேச செயலகம் இக்கட்டிடத்தை பொறுப்பெடுத்து  பெரியநீலாவணையில் உள்ள பொறுப்புடன் செயற்படும் பொது அமைப்புக்களிடம்  வழங்கி, பராமரித்து மக்கள் பயன்படுத்தும்வகையில்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.