வங்காள விரிகுடாவில் தென்மேற்கு உருவாகி வரும் புயலினால் இலங்கைக்கும், தமிழ்நாட்டின் தெற்கு கரையோரப் பகுதிகளும் அடுத்தவாரம் கடுமையான பாதிப்புக்களைச் சந்திக்கக் கூடும் என்று அமெரிக்க காலநிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை (நவம்பர் 28) இந்தப் புயலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 ஆம் திகதி வரை கடுமையான மழை தொடக்கம் மிகக் கடுமையான மழை வரை, இலங்கையிலும், தென்னிந்தியாவின் கரையோரப் பகுதிகளிலும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமெரிக்க காலநிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.