வவுனியா மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களில் பனிமூட்டமான காலநிலை நிலவுகிறது.

இதன் காரணமாக ஏ9 வீதியின் ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகள் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.

நுவரெலியாவை போன்று வீதிகள் பனிமூட்டத்தால் மூடப்பட்டுள்ளமையினால் சாரதிகள் மிகுந்த அவதானமாக பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று காலை இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வவுனியா, மாங்குளம், புளியங்குளம் மற்றும் இரட்டைபெரியகுளம் ஆகிய பிரதேசங்களில் இந்த பனி மூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

கடந்த சில நாட்களாக காணப்பட்ட வறட்சியான காலநிலையை தொடர்ந்து பனி மூட்டம் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பனிமூட்டம் காரணமாக அவதானமாக வாகனம் ஓட்டுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.