நடிகை நமீதா  தன் திருமண அறிவிப்பை வெளியிட்டுவிட்டார். வீரா என்பவரைத்தான் திருமணம் செய்யப் போவதாகவும், இது காதல் / ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

நமீதாவுக்கு மாப்பிள்ளையாகியிருக்கும் வீரா யார்?


வீரா
அவர் ஒரு சினிமா தயாரிப்பாளர். வளரும் நடிகர். மியா என்ற படத்தில் நமீதாவுடன் நடித்தவர்தான் இந்த வீரா. சசிதர் பாபு என்ற நண்பர் மூலம் நமீதாவுக்கு அறிமுகமான வீரா, பின்னர் நெருக்கமான நண்பராக, காதலராக மாறிவிட்டார்.

கேண்டில் லைட் டின்னர்
ஒரு கேண்டில் லைட் டின்னர் வைத்து நமீதாவிடம் தன் காதலை வீரா சொல்ல, அடுத்த நொடியே ஓகே சொல்லிவிட்டாராம் நமீதா.

அதன் பிறகு மூன்று மாதங்கள் இருவரும் நெருங்கிப் பழகி, பல இடங்களுக்கு ஜோடியாகச் சென்று ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பிறகு இந்தக் கல்யாண அறிவிப்பை வெளியிட்டதாக நமீதா கூறியுள்ளார்.


நமீதா ஸ்டேட்மென்ட்
“வீரா எனக்குக் கிடைத்தது என் அதிர்ஷ்டம். இருவரும் கடந்த மூன்று மாதங்களாக பல மலைப் பகுதிகளில் நடந்து திரிந்தோம். அப்போது இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். கடந்த செப்டம்பர் 6-ம் தேதி ஒரு பீச்சில் கேண்டில் லைட் டின்னருக்கு ஏற்பாடு செய்திருந்தார் வீரா. அங்கு வைத்து என்னிடம் தன் காதலை அவர் தெரிவித்த விதம் அருமையாக இருந்தது. நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. ப்ளாட்டாகிட்டேன். உடனே சம்மதம் தெரிவித்தேன். இருவருக்குமே ஒரே மாதிரி விருப்பங்கள், ஆசைகள், ஆன்மீக நாட்டங்கள். உங்கள் ஆசியுடன் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்,” என்று கூறியுள்ளார்.


திருமணத்துக்குப் பின்
நமீதாவுக்கு தமிழில் இரு படங்கள் மட்டுமே உள்ளன. அவற்றிலும் நடித்து முடித்துவிட்டார். நவம்பர் 24ம் தேதி திருப்பதியில் திருமணம். திருமணத்துக்குப் பிறகு நடிப்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை.