(துறையூர் தாஸன்)

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தின் 08 ஆம் பிரிவிலுள்ள 36 வயதுடைய ரோபால் வாணி எனும் இரு பிள்ளைகளின் தாயொருவர்
மின் ஒழுக்கு மின்சார தாக்கத்திற்குள்ளாகி பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,இன்று அதிகாலை இடி மின்னல் மழையுடனான வேளையில்,இயங்கியிருந்த தொலைக்காட்சியின் அன்றனா(Antana) தொடர்பை தூண்டிக்க முற்பட்ட போது, மின்சாரத் தாக்கத்துக்குள்ளாகி மயக்கமுற்ற நிலையில்,அருகிலுள்ள கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சை பலனின்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.