தியாகத் தீபம் திலீபனின் 30 ஆண்டுகள் நினைவேந்தல் நிகழ்வின் ஒரு அம்சமாக ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமைச் செயலகத்தின் வெளியீட்டுக்குழுவினரின் ஏற்பாட்டில் “திலீபன் வழியில் வருகின்றோம்” எனும் கொள்கையிலான இறுவெட்டு வெளியீடு நிகழ்வு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நேற்று 22 நடைபெற்றது.
இந்நிகழ்வானது ஜனநாயக போராளிகள் கட்சியின் திருமலை மாவட்ட இணைப்பாளர் என்.நவமேனன் தலைமையில் மௌன இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. துரைரட்ணசிங்கம் மனித உரிமைகள் மேன்பாட்டிற்கும் பாதுகாப்பிற்குமான நிலையத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய அருட்தந்தை எஸ். யோகேஸ்வரன், கனடா நாட்டின் சமூக செயற்பாட்டாளர் ரமேஸ் நிக்லஸ், கட்சியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் என். சனஐPவா தலைமைச் செயலகத்தின் உறுப்பினர் எஸ். செல்வ சந்திரன் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் உறுப்பினர்கள், திருமலை மாவட்ட மகளீர் சங்க அங்கத்தவர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விறுவெட்டானது பத்துப் பாடல்களை உள்ளடங்கியதாக முல்லைமதியின் இயற்றலில் தேனிசை செல்லப்பா மற்றும் மணிமேகலை ஆகியோர் இணைந்து குரல் கொடுத்து பாடல் வடிவமாக உத்தியோகபூர்வமாக வெளியீடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(டினேஸ்)

Leave a Reply

Your email address will not be published.