திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ரத சப்தமி விழா.

உலகில் மிக அதிக பக்தர்களால் தரிசிக்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஏதேனும் ஒரு விசேஷம் நடந்த வண்ணம் இருக்கும். அதில் வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, ஜென்மாஷ்டமி, புரட்டாசி மாத பிரமோற்சவம் மிகவும் முக்கியமாக விழாவாகக் கருதப்படுகிறது.

இதில் மிக முக்கிய விழாவாகவும், மினி பிரமோற்சவம் என அழைக்கப்படும் ரத சப்தமி விழா ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு அடுத்த ஏழாவது நாளில் கொண்டாடப்படுவதாகும். இந்த அற்புத நாளில் தான் சூரிய கடவுளின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ரத சப்தமி விழா நடைபெறுவது வழக்கம். சூரியனின் பிறந்த நாள் என்பதால், சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசாமிக்கு சூரிய நாராயணராக எழுந்தருளும் சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு, காலை 6.30 மணிக்கு சூரிய பிரபை வாகன ஊர்வலம் தொடங்குகிறது.