இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக, முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் இனிவரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்ற அறிவிப்பை அவர் அண்மையில் வெளியிட்டிருந்தார்.

தமிழரசுக் கட்சியுடன் பேச்சுவார்த்தை எதுவும் முன்னெடுப்பதாக இருந்தால், தமிழரசுக் கட்சி மக்கள் கொடுத்துள்ள ஆணையை ஏற்று அதற்கமைய செயற்பட தயாராக வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், தேர்தலில் பொது சின்னம் ஒன்றின்கீழ் போட்டியிடுவது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவை இல்லாமல் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தம்மால் செயற்படும் சாத்தியம் இல்லை என்று சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.