தமிழக தேர்தல் களம் : வெறும் வாயசைத்த விஜயகாந்த். பின்னனியில் ஒலித்த குரல் புது விதமான பிரச்சாரம்!

தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த விஜயகாந்த் எதுவும் பேசாமல் வெறுமனே தொண்டர்களுக்குக் கையசைக்க பின்னணியில் அவர் பேசிய பேச்சு ஒளிபரப்பு .

சட்டமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அணியில் இணைந்து இருக்கும் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் கிடைத்திருக்கும் நிலையில் தற்போது பிரேமலதா மட்டுமே 60 தொகுதிகளிலும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த தேர்தலில் தேமுதிக தலைவரான விஜயகாந்த் கூட போட்டியிடவில்லை என்பது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தொண்டர்களை உற்சாகப்படுத்த கேப்டன் விஜயகாந்த் இரு தினங்களாக விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது வேனில் இருந்த படியே வெறுமனே தொண்டர்களை நோக்கி கையசைக்க மட்டுமே செய்தார். ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. இதனால் தொண்டர்கள் முழு திருப்தி இல்லாமல் போனது. அதைப் போக்க இப்போது தேமுதிகவினர் புது யுக்தியைக் கையாண்டு வருகின்றனர். பிரச்சாரத்தின் போது தொண்டர்களைப் பார்த்து கைமட்டும் அசைக்க விஜயகாந்தின் பழைய பிரச்சார பேச்சுகளை பின்னணியில் ஒலிபரப்புகின்றனர். இதனால் விஜயகாந்த் பேசுவது போன்ற ஒரு தோற்றம் உருவாகிறது. இது அக்கட்சியின் தொண்டர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.