தமிழக சட்டசபை தேர்தல் களம்: தேர்தல் நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகையின் மதிப்பு மட்டும் இவ்வளவு கோடியா?

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து வாக்குப்பதிவு நாள் வரை தமிழக முழுவதும் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணம், நகை, பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் உள்ளிட்டவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் காலகட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள், அவற்றின் மதிப்பு குறித்த விவரத்தை மாநில தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரொக்கப் பணம் இந்திய மதிப்பில் 236 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 173 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளும், 3.17 கோடி இந்திய ரூபாய் மதிப்புடைய வெள்ளிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திமுக மட்டும் 150: பி.கே சொன்ன தகவலால் உற்சாகமான ஸ்டாலின்

மேலும், 5.27 கோடி இந்திய ரூபாய் மதிப்புடைய 2.9 லட்சம் லிட்டர் மதுபானங்கள், 1.95 கோடி இந்திய ரூபாய்க்கான சேலை உள்ளிட்ட துணிமணிகள், 23.14 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான குக்கர், குடம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் ஆகியவற்றையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.