(துறையூர் தாஸன்)

மாற்று கொள்கைக்களுக்கான நிலையம் மற்றும் கிராமிய திட்டமிடல் அமைப்பின் ஏற்பாட்டில்,தகவல் அறியும் உரிமை மற்றும் அமுல்படுத்தல் தொடர்பான மாநாடு,திட்ட முகாமையாளர் வ.ரமேஸ் ஆனந்தன் தலைமையில்,மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்க மண்டபத்தில் (15) இடம்பெற்றது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஸ்ட ஆய்வாளர் லயனல் குருகே,சட்டத்தரணி எஸ்.ஜீ.புஞ்சிஹோவா ஆகியோர் வளவாராக கலந்து கொண்டார்.

தகவல் அறியும் உரிமை சட்டம்,நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை,மக்களால் நடைமுறைப்படுத்தும் ஒரே ஒரு சட்டம் தகவலறியும் சட்டம்,பொறுப்புக்கூறல்,அரச அலுவலர்கள் எழுத்து மூலம் தகவல் தெரிவித்தல்,அலுவலகங்களில் தகவல் அதிகாரி நியமிக்கப்படல்,தகவல் கோரும் முறை மற்றும் அதன் பயன்பாடுகள் போன்ற விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

சமூக மட்ட குழுக்கள்,இளைஞர் கழகங்கள்,அகம் நிறுவனத்தினர்,அமைப்புகள் ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.