சீயான் விக்ரம் அவர்களின் மகன் துருவ் நாயகயான அறிமுகமாகும் ‘வர்மா’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பாலா, படத்தில் அவருக்கு பொருத்தமான ஜோடியை தேடி வருகிறார்.

துருவ் நாயகனாக அறிமுகமாகும் படத்தின் நாயகியாக ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நாயகிகள் யாரும் இயக்குநர் பாலாவின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற் போல் இல்லை என்பதால் புதுமுகத்தை தேடும் படலம் தொடர்கிறது. இது குறித்து சீயான் விக்ரம் தன்னுடைய இணையப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் துருவ்விற்கு ஜோடியாக அறிமுகமாக விரும்பும் பெண்ணிடம் இருக்கவேண்டிய தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து ஒரு பட்டியலே இடம்பெற்றிருக்கிறது. இதையெல்லாம் பார்த்த வளரும் நடிகைகள் ஆச்சரியப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். இவர்கள் யாரைத்தான் தெரிவு செய்கிறார்கள் என்று பார்ப்போமே..?

தன் மகன் துருவ்விற்கு திரையுலக ஜோடியை தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, மும்பை மற்றும் வெளிநாடுகளிலும் தேடி வருகிறாராம் சீயான் விக்ரம். இவரது ஈடுபாட்டை நினைத்து இயக்குநர் பாலா பெருமிதம் அடைகிறாராம்