சொற்ப அளவிலானவர்கள் இனவாதப் பிரச்சினையை உருவாக்க முயற்சிக்கின்றார்கள் என அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் காலியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

சிறிய சம்பவமொன்றை இனவாத பிரச்சினையாக உருவாக்கி அதன் ஊடாக குறுகிய அரசியல் லாபமீட்ட சிலர் முயற்சிக்கின்றனர்.

இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். துரதிஸ்ட வசமான சிறு சம்பவங்களின் போது மக்கள் பொறுமையுடன் அமைதி காக்க வேண்டும்.

தமிழ், சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையில் வரலாற்றுக் காலம் முதல் நீடித்து வரும் சகோதரத்துவம் மற்றும் நட்பை சிதைக்க சிலர் முயற்சிக்கின்றனர்.

சிறு சிறு சம்பவங்களை பயன்படுத்தி அரசியல் லாபமீட்ட இவர்கள் திட்டம் தீட்டுகின்றனர்.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நான் பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

சம்பவங்கள் இடம்பெறும் போது புத்திக்கு முன்னுரிமை வழங்கி பொறுமையுடன் மக்கள் செயற்பட வேண்டுமென அமைச்சர் பதியூதீன் கோரியுள்ளார்.