சைட்டம் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள தீர்வை எதிர்த்து மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் சாகும் வரை உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்துள்ளது.

குறித்த சங்கத்தின் 5 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் இவ்வாறு சாகும் வரை உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பேராசிரியர் ஹர்ச டி சில்வாவின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு சமர்ப்பித்த பரிந்துரைகளை செயற்படுவத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஒன்பது பேர் அடங்கிய குழுவில் சைட்டம் பிரதிநிதிகள் எவரும் இல்லை என சைட்டம் தலைவர் மருத்துவர் நெவில் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.