(டினேஸ்)
சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற சபையை பிரிக்கக் கோரி  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வாரத்தில் பல போராட்டங்கள் நடாத்தப்பட்டன இதன் ஒரு கட்டமாக மனித சங்கிலி போராட்டம் இன்று 11 சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக இடம்பெற்றது.
இச்சங்கிலிப் போராட்டம் சாய்ந்தமருது மாலிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல்களின் தலைவர் வை,எம், ஹனீபா தலைமையில் நடைபெற்றது.
இதில் இளைஞர்கள் பள்ளிவாசல் உலமாக்கள்  தலைவர் மற்றும் நிருவாக உறுப்பினர் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக பலரும் கலந்து கொண்டு அவர்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.