கல்முனையையடுத்துள்ள சாய்ந்தமருதுக்கடலில் குளித்துக் கொண்டிருந்த 6 இளைஞர்கள்  (11) சனிக்கிழமை காணாமல் போயுள்ளனர்.

இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு, தேடுதலின் போது ஐவர் மிக ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஹாப்தீன் இன்சாப் (வயது 17)  இளைஞர் மீட்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன இளைஞனை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடலில் குளிக்கச்சென்ற 6 இளைஞர்களும் கல்முனை சாஹிராக்கல்லுரியில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடலில் மூழ்கி மீட்கப்பட்டுள்ள மாணவர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.